அடடே.. ஸ்வீட் கார்ன் பாலக்கீரை கட்லெட் ரெசிபி

சோளம் மற்றும் பாலக்கீரையைக் கொண்டு சூப்பர் ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பாலக் கீரை - ஒரு கட்டு

வேகவைத்த ஸ்வீட் கார்ன் - ஒரு கப்

உருளைக்கிழங்கு - 2

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1

பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

சாட் மசாலா - 2 டீஸ்பூன்

பிரெட் க்ரம்ப்ஸ் - 5 டீஸ்பூன்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி பாலக்கீரையை போட்டு வேகவிடவும்.

வெந்ததும், தண்ணீரில் போட்டு எடுத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.பின்னர், சோளத்தை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அத்துடன், பாலக்கீரையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

பின்னர், பிரெட் க்ரம்ஸ் சேர்த்து பிசைந்து பிரிட்ஜில் சுமார் 20 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு, சிறிது உருண்டைகளாக எடுத்து வடைப்போல் தட்டிக் கொண்டு மீண்டும் பிரிட்ஜில் 10 நிமிடங்கள் வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், தட்டி வைத்த கலவையை போட்டு வறுத்து எடுக்கவும்.

சுவையான ஸ்வீட் கார்ன் பாலக்கீரை கட்லெட் ரெடி..!

More News >>