அட்டகாசமான சுவையில் இறால் சோள கட்லெட் ரெசிபி
வீட்டிலேயே சுவையான இறால் சோள கட்லெட் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
இறால் - அரை கிலோ
வெங்காயம் - 2
சோளம் - ஒரு கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 5
பூண்டு - 8
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 2
மல்லித்தூள் - ஒரு டேபிள்
சீரகத்தூள் - அரை டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பிரெட் க்ரம்ப்ஸ் - அரை கப்
புதினா - 15
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் பூண்டு, இஞ்சி, புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும்.
இதேபோல், வேக வைத்த சோளத்தை மிக்ஸியில் அரைத்து கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர், இறால், நறுக்கிய வெங்காயம் சேர்த்து அரைத்து கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
அத்துடன், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, பிரெட் க்ரம்ப்ஸ் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், கலவையில் இருந்து கொஞ்சமாக எடுத்து கட்லெட் போல் தட்டி பிரெட் க்ரம்ஸில் பிரட்டி மிதமான சூட்டில் வேகவிடவும்.
இரண்டு பக்கமும், வெந்து பொன்னிறமாக மாறியதும் எடுத்து சுடச்சுட பரிமாறவும்.
சுவையான இறால் சோள கட்லெட் ரெடி..!