உடலுக்கு சத்துத் தரும் அகத்திக்கீரை பொரியல் ரெசிபி
உடல் ஆரோகியத்துக்கு மிகவும் நன்மைத் தரும் அகத்திக்கீரை பொரியல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
அகத்திக்கீரை - ஒரு பெரிய கப்
பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கடுகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
தேங்காய் துருவல் - ஒரு கப்
நல்லெண்ணெய்
உப்பு
செய்முறை:
பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், பாசிப்பருப்பை சேர்த்து வேகவிடவும்.
பருப்பு வேகும்போது மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
அகத்திக்கீரையை உருவி எடுத்து கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், கீரையை பருப்புடன் சேர்த்து வேகவிடவும்.
மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் போட்டு தாளிக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.அத்துடன், கீரையை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கிக் கொண்டே இருக்கவும்.
இறுதியாக, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி 2 நிமிடங்களில் இறக்கிவிடவும்.சுவையான அகத்திக்கீரை பொரியல் ரெடி..!