ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் விளம்பரம் வருகிறதா? எளிதாக தடுக்கலாம்!
எதையெடுத்தாலும் விளம்பரம் என்னும் காலகட்டத்தில் வாழ்கிறோம். பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்களின் பின்புறம், ரயில் பெட்டிகளின் உள்புறமும் வெளிப்புறமும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திதாள்கள் எல்லாவற்றிலும் விளம்பரங்களே நிறைந்துள்ளன. விளம்பரங்கள் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் விட்டு வைக்கவில்லை.
இதை வாசிக்கலாம்; அதை வாசிக்கலாம் என்று வாரம் முழுவதும் குறித்து 'புக்மார்க்' செய்து வைத்த பக்கங்களை வாரஇறுதியில் ஒருங்கே வாசிக்க உட்காரும்போதும், பயணச் சீட்டு பதிவு செய்ய செயலிகளை திறக்கும்போதும், விளையாட்டுகளுக்கான (gaming apps) செயலிகளிலும்கூட விளம்பரங்கள் வந்து கொட்டுகின்றன.
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வரும் பொறுமையை சோதிக்கும் இந்த விளம்பரங்களை தடுக்க இயலாதா? அதற்கு சில வழிமுறைகள் உள்ளன.
கூகுள் குரோம் பிரௌசர்
கூகுள் குரோம் பிரௌசரை பயன்படுத்தி இணையத்தில் உலவும்போதும், வீடியோக்களை பார்க்கும்போதும், செய்திகள், கட்டுரைகளை வாசிக்கும்போதும் பல விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கும். இவை, குரோமினால் காட்டப்படுபவை அல்ல. பின் வரும் வழிமுறைகளை பயன்படுத்தி அவற்றை தடுக்க (block) முடியும்.
குரோம் பிரௌசரின் அமைப்பு பகுதிக்கு செல்க (Chrome browser settings)
தள அமைப்பு பகுதிக்குச் சென்று மேலே சொடுக்குக (Site Settings and tap)
பாப்-அப் பகுதிக்குச் சென்று தெரிவு செய்க (Pop ups and toggle)
ஆட் பிளாக்கர் செயலி (ad blocker)
ஸ்மார்ட்போனில் ஆட் பிளாக்கர் செயலியை பயன்படுத்தியும் விளம்பரங்களை தடுக்கலாம். இணையத்தில் உலவும்போது மட்டுமல்ல, செயலிகளை பயன்படுத்தும்போதும், விளையாடும்போது (கேம்) காட்சியளிக்கக்கூடிய விளம்பரங்களையும் இது தடுத்துவிடும்.
ஆனால், ஆட் பிளாக்கர் செயலியை (ad-blocker APK)போனில் நிறுவுவதற்கு சில மாற்றங்களை செய்யவேண்டி வரும்.
ஆட் பிளாக்கர் செயலியை நிறுவுதல்
ஸ்மார்ட்போனின் அமைப்பு பகுதியில் பாதுகாப்பு என்ற பிரிவுக்குச் செல்க (Device Settings then go to Security)
இதில் அறியாத மூலங்கள் என்ற (Unknown sources) பகுதியை தெரிவு செய்கபாப்-அப் பகுதியில் உறுதி செய்க
ஆட்பிளாக் பிளஸ் செயலியை நிறுவுதல்
ஸ்மார்ட்போனின் பிரௌசரை பயன்படுத்தி ஆட்பிளாக்கர் பிளஸ் மென்பொருளை தரவிறக்கம் செய்க
கோப்பு பகுதியில் APK கோப்பின் மீது சொடுக்கி நிறுவும் கட்டளையை தருக
செயலி ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்ட பிறகு அதை திறக்கவும்
பின்பு OK கட்டளையின் மூலம் உறுதி செய்க.
இவை தவிர ஆட்கார்ட் (AdGuard), ஆட்லாக் (AdLock) மற்றும் ஆட்அவே (AdAway)போன்ற செயலிகளை பயன்படுத்தியும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் விளம்பரங்கள் தோன்றாமல் தடுக்க இயலும்.
கேம் பூஸ்ட்டுடன் கூடிய ஆப்போ கே3 ஸ்மார்ட்போன் விற்பனை