ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வான்கோழி கபாப் ரெசிபி
வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் வான்கோழி கபாப் ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
வான்கோழி கறி - அரை கிலோ
பச்சை மிளகாய் - 4
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூபன்
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
சீஸ் - 2 டீஸ்பூன்
பொரிச்ச வெங்காயம் - ஒரு கைப்பிடி
துளசி இலை - 10
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் வான்கோழியை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அத்துடன், இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், ஏலக்காய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள், சீஸ், பொரிச்ச வெங்காயம், பொடியாக நறுக்கிய துளசி இலை, பொரிச்ச வெங்காயம் அனைத்தும் சேர்த்து இரண்டு கத்திகளைக் கொண்டு நன்றாக கொத்திக் கொள்ளவும்.
இறுதியாக உப்பு, குங்குமப்பூ சேர்த்து கலக்கவும்.
தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், கலவையில் இருந்து கொஞ்சமாக எடுத்து தட்டி போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து வறுத்து எடுக்கவும்.
சுவையான வான்கோழி கபாப் ரெடி..!