சுவையான இறால் நூடுல்ஸ் ரெசிபி
குழந்தைகளுக்குப் பிடித்த இறால் நூடுல்ஸ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 300 கிராம்
இறால் - 200 கிராம்
வெங்காயம் - 1
குடைமிளகாய் - ஒரு கப்
முட்டைக்கோஸ் - ஒரு கப்
கேரட் - அரை கப்
பீன்ஸ் - அரை கப்
இஞ்சி - அரை டீஸ்பூன்
பூண்டு - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்
சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
வினீகர் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கழுவி சுத்தம் செய்த இறால் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன், முட்டைக்கோஸ், குடைமிளகாய், பீன்ஸ், கேரட் சேர்த்து நன்றாக வதக்கி வேகவிடவும்.
பின்னர், வெந்நீரில் போட்டு வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறவும்.
மிளகுத்தூள், வினீகர், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வேகவைத்து இறக்கவும்.
சுவையான இறால் நூடுல்ஸ் ரெடி..!