சத்தான மற்றும் சுவையான தினை பிசிபெலாபாத் ரெசிபி
உடலுக்கு சத்துத்தரும் தினையைக் கொண்டு பிசிபெலாபாத் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
தினை - முக்கால் கப்
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
தனியா - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
வரமிளகாய் - 6
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - ஒரு கப்
தேங்காய்த்துருவல் - அரை கப்
கேரட் - ஒரு கப்
பீன்ஸ் - ஒரு கப்
பட்டாணி - அரை கப்
உருளைக்கிழங்கு - 1
முருங்கைக்காய் - 1
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
புளி கரைசல் - அரை கப்
நெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் முக்கால் கப் தினையை தண்ணீர் ஊற்றி சுமார் 3 மணிநேரம் ஊறவிடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும், கடலை பருப்பு, தனியா, சீரகம், சோம்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்ததும், இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பொடித்து எடுக்கவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன், நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, முருங்கைக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர், அதில் தண்ணீர் சேர்த்து காய்களை வேகவிடவும். காய்கள் வெந்ததும், புளி கரைசல், சாம்பார் பவுடர் சேர்த்து கலந்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும்.
இதற்கிடையே, குக்கரில் தினை, ஒன்றுக்கு மூன்று கப் துவரம் பருப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மூடிப்போட்டு சுமார் 4 விசில்விடவும்.
தினை கலவை வெந்ததும், சாம்பார் கலவையில் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் உப்பு சேர்க்கலாம்.
சுவையான தினை பிசிபெலாபாத் ரெடி..!