சிக்கன் பிரியர்களுக்கு பிடித்த டிராகன் சிக்கன் ரெசிபி
சிக்கன் பிரியர்களுக்கு டிராகன் சிக்கன் ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் - 4 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
முட்டை - ஒன்று
சோள மாவு - 4 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - கால் கப்
நறுக்கிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் துகள் - 2 தேக்கரண்டி
வெங்காயத்தாள் - அரை கப்
குடை மிளகாய் - பாதி
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் போடவும்.
அத்துடன், மிளகுத்தூள், சோயா சாஸ், முட்டை, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.
பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து தனியாக வைக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், உடைத்த முந்திரி போட்டு வறுக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் துகள், பொடியாக நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், குடைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
தொடர்ந்து, சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர், அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிவந்ததும், தண்ணீரில் கரைத்த சோள மாவு சேர்த்து கலக்கவும்.இந்த கலவை கிரேவி பதத்திற்கு வந்ததும், பொரித்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறிவிடவும்.
அட்டகாசமான சுவையில் டிராகன் சிக்கன் தயார்..!