அரசு கேபிள் டிவியில் சந்தா தொகை குறைப்பு ஆக.10 முதல் அமலாகிறது
அரசு கேபிள் டி.வி. மாதச் சந்தா கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மக்கள், குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவையை பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், கடந்த 2011-ம் ஆண்டில் ஜெயலலிதாவால் புத்துயிர் ஊட்டப்பட்டு குறைந்த கட்டணத்தில் 100 சேனல்களை வழங்கி வந்தது. இதன்பின், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திடம் இருந்து டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று, டிஜிட்டல் ஒளிபரப்பு முறையை 1.9.2017 அன்று தொடங்கி வைத்தேன்.
இதுவரை 36 லட்சம் ‘செட்-டாப்’ பாக்ஸ்கள் கொள்முதல் செய்து, சுமார் 35 லட்சத்து 12 ஆயிரம் ‘செட்-டாப்’ பாக்ஸ்களை அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். இந்நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முழுவதும் (வேலூர் மாவட்டம் தவிர) வரும் 10ம் தேதி முதல் ரூ.130 + ஜி.எஸ்.டி. என்ற மாத சந்தா கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தற்போது அரசு கேபிள் டி.வி.யில் மாதச் சந்தாவாக மாதம் ரூ.220 மற்றும் ஜி.எஸ்.டி. சேர்த்து ரூ.259.60 வசூலிக்கப்பட்டு வருகிறது. கட்டணக் குறைப்பு காரணமாக வரும் 10ம் தேதி முதல் ரூ.153.40 வசூலிக்கப்படும். இதன்படி சந்தாவில் ரூ.106 குறைகிறது.
தற்போது வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால், தேர்தல் நடத்தை விதிகளை கருத்தில்கொண்டு வேலூர் நீங்கலாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
எங்களை கவிழ்க்க நினைத்தால் திமுகவை இரண்டாக்கி விடுவோம்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் சீண்டல்