உன்னோவ் பலாத்கார வழக்கு பாஜக எம்.எல்.ஏ குல்தீப் நீக்கம்

உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், அவரது வழக்கறிஞர் மற்றும் 2 உறவினர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேபரேலியில் உள்ள உறவினரைச் சந்திக்க காரில் சென்றன். அப்போது, லாரி ஒன்று இவர்கள் காரின் மீது மோதியது. இதில் உறவினர்கள் 2 பேரும் உயிரிழந்தனர், பாதிக்கப்பட்ட பெண்ணும், வழக்கறிஞரும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இளம்பெண் பலாத்கார வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்கு ஆகியவை சிபிஐக்கு மாற்றப்பட்டது. பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. செங்கர் தற்போது சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை பாஜக கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்ணை கொல்ல முயற்சி; பாஜக எம்எல்ஏ மீது கொலை வழக்கு

More News >>