ஈஸியான கறிவேப்பிலை குழம்பு ரெசிபி ரெடி..
ஈஸியான கறிவேப்பிலை குழம்பு எப்படி செய்றதுனு பார்க்கலாமா..
சமைக்க தேவையானவை
கறிவேப்பிலை – ஒரு கப் மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை பெருங்காயம் – சிறிதளவு துவரம்பருப்பு உளுத்தம்பருப்பு மிளகு – தலா 2 டீஸ்பூன் இஞ்சி – ஒரு சிறிய துண்டு புளி – எலுமிச்சை அளவு கடுகு – அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு.
உணவு செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, தோல் நீக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து, அரைத்த வைத்துள்ள விழுதைப் போட்டு நன்றாக கிளறவும். பிறகு, புளிக் கரைசலை சேர்த்து… உப்பு, மஞ்சள்தூள் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.