உடல் எடையைக் குறைக்க உதவும் கொள்ளு சூப் ரெசிபி

வீட்டிலேயே உடல் எடையைக் குறைக்க உதவும் கொள்ளு சூப் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 2 டேபிள் ஸ்பூன்

வேகவைத்த துவரம் பருப்பு தண்ணி - 3 கப்

மிளகு - கால் டீஸ்பூன்

சோம்பு - கால் டீஸ்பூன்

கிராம்பு - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

பச்சை மிளகாய் - 3

சின்ன வெங்காயம் - 15

பெரிய தக்காளி - 1

கொத்தமல்லித்தழை

கறிவேப்பிலை

நல்லெண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து கொள்ளு போட்டு மிதமான சூடில் வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் பொடிக்கவும்.

பிறகு, குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்விட்டு சூடானதும் மிளகு, சோம்பு போட்டு பொரிக்கவும்.

அத்துடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பொரிக்கவும்.

பின்னர், சின்ன வெங்காயம், தட்டி வைத்த மிளகு, பூண்டு, சீரகம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

தொடர்ந்து, தக்காளி சேர்த்து வதக்கி, பருப்பு தண்ணி மற்றும் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

பிறகு, அரைத்து வைத்த கொள்ளு பொடி, உப்பு சேர்த்து கலந்து மூடிப்போட்டு ஒரு விசில்விடவும்.

விசில் வந்து, ஆவி முழுமையாக போனதும் இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து சுடச்சுட பரிமாறவும்.

சுவையான கொள்ளு சூப் ரெடி..!

More News >>