நாளை ஆடி 18-ம் பெருக்கு நாள் - பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும்

நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு விடுமுறை நாளான சனிக்கிழமையிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆடிப்பெருக்கு நாளில் சுப காரியங்கள் செய்தால் மங்களம் உண்டாகும் என்பது தமிழக மக்களின் நம்பிக்கை. இந்த நாளில் விவசாயம் செழிக்க விவசாயிகள் விதை விதைப்பது வழக்கம். வீடுகளிலும் பயிர்க்குழி தோண்டி காய்கறி விதைகளை விதைப்பதும் கிராமங்களில் காலம், காலமாக நடைபெற்று வருகிறது. இதே போன்று புதிதாக சொத்து, வீடு, மனை வாங்குவோர், பாகப் பிரிவினை செய்வோர் ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு செய்வதை சுபமாக கருதுவர்.இதனால் ஆடிப்பெருக்கு நாளில், வழக்கத்தை விட பல மடங்கு ஆவணப் பதிவுகள் நடைபெறுவதும் வழக்கம்.

இந்த முறை ஆடிப்பெருக்கு நாள் விடுமுறை தினமான சனிக்கிழமையில் (நாளை) வருவதால் பத்திரப்பதிவு செய்ய திட்டமிட்டிருந்த பலரும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் ஆடிப்பெருக்கு தினத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறந்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடப்பட்டது. இதையடுத்து நாளை திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்பதி வாளர்களுக்கு பத்திரப் பதிவுத் துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஆகஸ்ட் 3-ம் தேதி சனிக் கிழமை ஆடிப்பெருக்கு நாளாகும். அன்று மங்களகரமான நாளாக இருப்பதால், சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணப்பதிவுகள், பதிவு அலுவலகங்களில் மேற் கொள்ளப்பட்டால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, ஆவணப்பதிவுகள் மேற் கொள்ள ஏதுவாக அன்றைய தினத்தில் பதிவு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆகஸ்ட் 3-ம் தேதி சனிக்கிழமை விடுமுறை நாளில் ஆவணப்பதிவுகள் மேற் கொள்ள அனைத்து பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10 மணி முதல் செயல்பட வேண்டும்.

விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு பதிவுச்சட்டத்தின்கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும். சனிக்கிழமை ஆவணப்பதிவு மேற் கொள்ளப்படும் என்று பொதுமக்கள் அறியும் வண்ணம் விளம்பரப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நின்ற கோலத்தில் அத்திவரதர்; அதிகாலையில் குவிந்த கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

More News >>