ஹாசினி கொலை வழக்கில் வரும் 19ம் தேதி தீர்ப்பு அறிவிப்பு
சிறுமி ஹாசினியை கொலை செய்த வழக்கின் தீர்ப்பு வரும் 19ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த தஷ்வந்த் என்பவர் தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தஷ்வந்தை சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியில் வந்த தஷ்வந்த் தனது தாய் பணம் கொடுக்காத காரணத்தால் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பினான்.
மும்பையில் மீண்டும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய தஷ்வந்தை கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் தஷ்வந்தை ஆஜர்படுத்தியதை அடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த சில மாதங்களாக நடந்து வந்த ஹாசினி கொலை வழக்கின் விசாரணைகள் முடிந்துள்ளது. இது தொடர்பாக இன்று நடைபெற்ற இறுதிக்கபட்ட விசாரணையின்போது, இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 19ம் தேதி வழங்கப்படும் என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த தஷ்வந்திற்கு கிடைக்கும் தண்டனை வலுவாக இருக்க வேண்டும் என பொது மக்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்து உள்ளன.