அட்டகாசமான சுவையில்.. கடாய் பன்னீர் ரெசிபி
ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் கடாய் பன்னீர் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 400 கிராம்
வெங்காயம் - மூன்று
குடைமிளகாய் - ஒன்று
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
பட்டை - 1
பிரியாணி இலை - 2
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கிராம்பு - 4
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 5
இஞ்சி - ஒரு துண்டு
தக்காளி - மூன்று
மசாலா பொடி - ஒன்றரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.
அதே வாணலியில் வெண்ணெய்விட்டு உருகியதும் பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில், தனியா, மிளகு, பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, சீரகம்,காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக்கவும்.
அதே கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர், தக்காளி சேர்த்து நன்றாக வேகவைத்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைக்கவும்.
மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து வேகவிடவும்.
பின்னர், மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனைபோகும்வரை வேகவிடவும்.
தொடர்ந்து, குடைமிளகாய் கலவை, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கிரேவி பதத்திற்கு வந்ததும் வறுத்து வைத்த பன்னீர் சேர்த்து கிளறி இறக்கவும்.சுவையான கடாய் பன்னீர் மசாலா ரெடி..!