வெற்றிகரமாக பயணிக்கும் சந்திரயான 2 - 4-வது புவிவட்டப் பாதையை கடந்தது
இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்கிறது. 4 -வது புவி வட்டப்பாதையை வெற்றிகரமாக கடந்து சென்றதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான 2 விண்கலத்தை இந்தியா விண்ணில் ஏவியுள்ளது.
கடந்த மாதம் 22-ந் தேதி பிற்பகலில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டது. நிலவின் தென்பகுதியை ஆராய, உலக நாடுகளிலேயே முதல் நாடாக இந்தியா தான் முதன் முறையாக விண்கலத்தை அனுப்பி இந்த சாதனையை நிகழ்த்தியது. இதில் ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என 3 நிலைகள் உள்ளன.
விண்ணில் ஏவப்பட்டு 10 நாட்களை கடந்த நிலையில் பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறது .தற்போது சந்திரயான் 2 விண்கலம் 4-வது புவி வட்டப்பாதையை வெற்றிகரமாக கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அடுத்ததாக 5-வது சுற்றுப்பாதையையும் கடந்து, வரும் 6-ந் தேதி நிலவின் வட்டப்பாதைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஒரு மாதம் நிலவின் வட்டப்பாதையில் பயணிக்கும் சந்திரயான்-2 விண்கலம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.