சுவையான பிரெட் தேங்காய் உருண்டை ரெசிபி

அனைவருக்கும் பிடித்த பிரெட் தேங்காய் உருண்டை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 2 கப்

சர்க்கரை - ஒரு கப்

பிரெட் க்ரம்ப்ஸ் - ஒரு கப்

பாதாம் - 5

முந்திரி - 5

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் தேங்காய்த்துருவலை போட்டு மிதமான சூட்டில் 3 நிமிடங்களுக்கு வறுக்கவும்.

பின்னர் சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளறி கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும்.அத்துடன் உப்பு, பாதாம், முந்திரி, கால் கப் பிரெட் க்ரம்ப்ஸ், பால் சேர்த்து நன்றாக கிளறி உருண்டைகள் செய்து வைக்கவும்.

இந்த உருண்டைகளை ப்ரெட் க்ரம்ப்ஸில் உருட்டி பீரிசரில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

பின்னர், வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான பிரெட் தேங்காய் உருண்டை ரெடி..!

More News >>