மே.இந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சு
அமெரிக்காவில் நடைபெறும் மே.இந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
மே.இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டி, 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் நடக்கிறது. எஞ்சிய போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைறுகின்றன.
இன்று இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி புளோரிடாவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து மே.இந்திய தீவுகள் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த மைதானத்தில் இரு அணிகளும் 2016-ம் ஆண்டில் ஒரு முறை மோதின. அந்தப் போட்டியில் மே.இந்திய தீவுகள்அணி முதலில் ஆடி 245 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை தழுவியது.
அதே மைதானத்தில் இரு அணிகளும் மீண்டும் மல்லுக்கட்டுவதால் இந்த ஆட்டத்திலும் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.