காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து மத்திய அரசின் முடிவுக்கு அதிமுக அமோக ஆதரவு
ஜம்மு& காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 -வது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கும், மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்ததற்கும் மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவளித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை நீக்கம் செய்யும் தீர்மானத்தை மாநிலங்களவையில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்தார். இதே போன்று ஜம்மு &காஷ்மீர் மாநிலம் என்ற அந்தஸ்தை இழக்கும் வகையில் அம் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இராண்டாக பிரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் இருக்கும். அதேபோல் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும்.
இதன்படி ஜம்மு காஷ்மீருக்கு தனி கொடி, தனி அரசியல் சாசனம் என்று எந்த விதமான அதிகாரங்களும் இருக்காது. இந்தியாவில் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் காஷ்மீருக்கு பொருந்தும். மாநிலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவோ, குறைக்கவோ முடியாது என்கிறது அரசியல் சாசனத்தின் 370-வது விதி. ஆனால் இனி மத்திய அரசு நினைத்தபடி எல்லைகளை மாற்றலாம்.
இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது என்று நிலை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இனி அனைத்து துறை சார்ந்த மீது மத்திய அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதம் இல்லாமல் அங்கு அமலுக்கு கொண்டு வர முடியும். இனி வெளிமாநில ஆண்களை காஷ்மீரில் வாழும் பெண்கள் மணமுடித்தால் அந்த ஆண்களால் இங்கு சொத்துகளை வாங்க முடியும். முன்பு இந்த அதிகாரம் கிடையாது.
இது போன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் சிறப்பு சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்து தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த போது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீர்மானத்தை அமித் ஷா தாக்கல் செய்து பேசினார். அதன் பின் இந்தத் தீர்மானத்தின் மீது 4 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.
காங்கிரஸ், திரிணாமுல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதனை எதிர்த்துப் பேசிய நிலையில் அதிமுகவோ, தீர்மாை த்திற்கு வரவேற்பு தெரிவித்து ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது. மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை சரியானது என்றார். சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்கியதும், மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றும் முடிவையும் வரவேற்பதாக நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
காஷ்மீரில் ஏதோ நடக்கப் போகிறது, ஆனால், யாருக்கும் தெரியவில்லை; கவர்னரை சந்தித்த உமர் பேட்டி