யம்மி.. பிரெட் ரசமலாய் ரெசிபி

அனைவருக்கும் பிடித்த ஸ்வீட் வகைகளில் ஒன்று ரசமலாய்.. இதை பிரெட் கொண்டு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பால் - ஒரு லிட்டர்

பிரெட் - 6 ஸ்லைஸ்

சர்க்கரை - 50 கிராம்

மில்க் மெய்ட் - ஒரு கப்

முந்திரி - 10

பிஸ்தா - 12

பாதாம் - 10

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

செய்முறை:

பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி காய்ச்சவும். பால் கொதித்து பொங்கி வரும்போது கலக்கிக் கொண்டே இருக்கவும்.

பால் நன்றாக காய்ந்து பாதி அளவில் வரும்போது, பொடித்த முந்திரி, பிஸ்தா, பாதாம், சர்க்கரை, குங்குமப்பூ, மில்க் மெய்ட் சேர்த்து இன்னும் பாதியாக குறையும்வரை கலக்கிக் கொண்டே இருக்கவும்.

பிரெட் ஸ்லைஸ்களை ஒவ்வொன்றாக எடுத்து தம்ளரை வைத்து வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

இதனை, ரசமலாயுடன் சேர்த்து சில நிமிடங்கள் ஊறவிட்டு, பின்னர் பரிமாறவும்.

சுவையான பிரெட் ரசமலாய் தயார்..!

More News >>