சூப்பர் ஸ்னாக்.. பிரெட் ஃபிரெஞ்ச் டோஸ்ட் ரெசிபி

குழந்தைகளுக்கு பிரெட் ஃபிரெஞ்ச் டோஸ்ட் செய்து கொடுத்து அசத்துங்க.. சரி, இந்த ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பிரெட் ஸ்லைஸ் - 5

முட்டை - 2

பால் - ஒரு கப்

சர்க்கரை - அரை கப்

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

வெண்ணிலா எசன்ஸ் - சில துளிகள்

வெண்ணெய்

உப்பு - ஒரு துளி

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.

அத்துடன், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பால், வெண்ணிலா எசன்ஸ், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக அடித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து முழுவதுமாக தடவவும்.

ஒவ்வொரு பிரெட் ஸ்லைஸ்களை எடுத்து முட்டை கலவையில் முக்கி எடுத்து வாணலியில் வைத்து இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.

இதேபோல் மற்ற ஸ்லைஸ்களையும் சுட்டு எடுக்கவும்.

பரிமாறும்போது, பிரெஸ் ஸ்டைகள் மீது தேன் ஊற்றி சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்..

சுவையான பிரெட் ஃபிரெஞ்ச் டோஸ்ட் ரெடி..!

More News >>