அட்டகாசமான சுவையில்.. மிளகு பூண்டு சிக்கன் கிரேவி ரெசிபி
அருமையான ருசியில் அனைவரையும் கவரும் மிளகு பூண்டு சிக்கன் கிரேவி ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - ஒரு கப்
மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
தயிர் - 3 டீஸ்பூன்
சோம்பு - அரை
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - முக்கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் பூண்டை மிக்ஸியில் ஒன்றும் பாதியாக அரைத்துக் கொள்ளவும்.
கிண்ணத்தில் கழுவி சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள், பூண்டு ஒன்றரை டீஸ்பூன், தயிர், மிளகாய்த்தூள், தயிர் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்த நன்றாக வதக்கவும்.
அத்துடன், பொடியாக நறுக்கிய இஞ்சி, அரைத்து வைத்த பூண்டு, சிக்கன் கலவை சேர்த்து நன்றாக கிளறவும். தொடர்ந்து, தயிர், உப்பு சேர்க்கவும்.
இறுதியாக, மிளகுத்தூள், கரம் மசாலா, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாகனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
சுவையான மிளகு பூண்டு சிக்கன் கிரேவி ரெடி..!