பிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, டெல்லி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில், ‘‘காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்திருப்பது சட்டவிரோதமானது. அம்மாநில சட்டசபையில் ஆலோசிக்கப்படாமல், இந்த பிரிவு நீக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசரமனுவாக நாளையே விசாரிக்க தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் சர்மா கோரிக்கை வைக்கவிருக்கிறார்.