வேலூர் முன்னணி நிலவரம் : 3-வது சுற்று அதிகாரப்பூர்வ முடிவு அதிமுக 2699 ஓட்டு அதிகம்
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை விட 2699 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியில் கடந்த 5-ந் தேதி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் பெற்றார்.. பின்னர் மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.
மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2699 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
3-வது சுற்று நிலவரம் :
ஏ.சி.சண்முகம் (அதிமுக): 85,513
கதிர் ஆனந்த் (திமுக): 82,814
தீபலட்சுமி (நாம் தமிழர்) : 3950
வாக்கு வித்தியாசம் மிக குறைவாகவே உள்ளதால் திமுக, அதிமுக இடையே கடும் இழுபறி தொடர்ந்து நிலவுகிறது. ஆனாலும் ஒவ்வொரு சுற்றிலும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னேறி வருகிறார்.