வேலூரில் திடீர் திருப்பம்: ஏ.சி.சண்முகத்தை முந்தினார் கதிர் ஆனந்த் 7500 வாக்கு முன்னிலை
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்று வரை முன்னணி நிலவரம் இழுபறியாக இருந்த நிலையில், 6-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை விட, 12,673 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 10-வது சுற்று முடிவில் ஏ.சி.சண்முகத்தை பின்னுக்குத் தள்ளி கதிர் ஆனந்த் 7500 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
10 சுற்று முடிவில் முன்னணி நிலவரம் :
ஏ.சி.சண்முகம் (அதிமுக): 2,56,633
கதிர் ஆனந்த் (திமுக): 2,64,633
தீபலட்சுமி (நாம் தமிழர்) : 13,206
இன்னும் பாதியளவு வாக்குகள் எண்ண வேண்டிய நிலையில் வெற்றி பெறப் போவது யார்? என்பதை கணிக்க முடியாத அளவுக்கு வேலூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் ஒவ்வொரு சுற்றிலும் மாறி, மாறி வருவது இரு கட்சியினரிடையேயும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
வேலூரில் வெற்றி யாருக்கு? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது