பாகிஸ்தானில் உரிமைகளுக்காகப் போராடிய ஓர் உயிர்: காலமானார் அஸ்மா ஜஹாங்கிர்
பாகிஸ்தானில் முதன் முதலாக மனித உரிமை ஆணையத்தை துணை- நிறுவனராக நிறுவிய அஸ்மா ஜஹாங்கிர் இன்று காலை காலமானார்.
1952-ம் ஆண்டு லாஹூரில் பிறந்த அஸ்மா ஜஹாங்கிர் பாகிஸ்தானின் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞராக நீண்ட காலமாகப் பணியாற்றினார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த அஸ்மா, 1987-ம் ஆண்டும் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் துணை நிறுவனரானார்.
1987-ம் ஆண்டிலிருந்து 1993-ம் ஆண்டு வரையில் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். அதன் பின்னர் ஆணையத்தின் தலைமை சேர்மேனாக உயர்ந்தார்.
தெற்காசிய மனித உரிமைகள் ஆணையத்தின் துணை தலைமை நிர்வாகியாகப் பதவி வகித்த அஸ்மா, பின்னர் ஐநா சபையின் மதம் மற்றும் நம்பிக்கைகளுக்கான சுதந்திரக் குழுவின் தூதரானார்.
பல கொலை மிரட்டல்களையும் துச்சமென மதித்து மனித உரிமைகளுக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் எதிர்த்து வந்த அஸ்மா, 2007-ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.
தனது சீரிய பணிக்காக ராமந் மகசேசே விருது வென்ற அஸ்மா, இன்று காலை நெஞ்சு வலியின் காரணமாகக் காலமானார்.