கமகமக்கும் சூப்பரான செட்டிநாடு நண்டு குழம்பு ரெசிபி
அசைவ உணவு விரும்பிகளுக்கு இங்கு செட்டிநாடு நண்டு குழம்பு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பெரிய நண்டு - 2
தேங்காய் துருவல் - 5 டேபிள் ஸ்பூன்
மிளகு - முக்கால் டீஸ்பூன்
சோம்பு - முக்கால் டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பூண்டு - 10
எலுமிச்சை சாறு
புளி - நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழை
நல்லெண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் நண்டுகளை கழுவி சுத்தம் செய்து கால்களை உடைத்தும் உடம்பு பாகத்தையும் தனியாக வைக்கவும்.
அத்துடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.
பின்னர், புளியை தண்ணீர் ஊற்றி ஊறவிட்டு கரைசல் தயார் செய்யவும்.தொடர்ந்து, சீரகம், சோம்பு, மிளகு, தேங்காய்த்துருவல் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்விட்டு சூடானதும் வெந்தயம், சோம்பு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வஅத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
தொடர்ந்து, அரைத்து வைத்து மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கி வேகவிடவும்.
பின்னர், நண்டு, புளி கரைசல் சேர்த்து கலந்து நன்றாக வேகவிட்டு இறக்கவும்.சுடச்சுட.. கமகமக்கும் செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி..!