ஈவெரா மண் என கர்நாடகாவை வேண்டுமானால் சொல்லலாம் - எச்.ராஜா தாக்கு

கர்நாடகாவை வேண்டுமானால் இது ஈவெரா மண் என்று சொல்லிக்கொள்ளலாம். தமிழகத்தை இது பெரியாழ்வார் மண் என்று தமிழிசை சொன்னது மிக சரியான சாலப்பொருத்தமானது என்று பாஜக தேசிய செயலாளார் எச்.ராஜா கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, ‘’ஐம்பது ஆண்டுகள் கழகங்கள் ஆட்சியில் கோவில்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறி உள்ளது. உண்மையாகவே பார்த்தால் பராசக்தி வசனம் இப்போதுதான் பொருந்தும். லட்சக்கணக்கான இந்து கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சூரையாடப் பட்டிருக்கின்றன.

தமிழக அரசு மதசார்பற்ற அரசாக இருந்தால் இந்து கோவில்களில் இருந்து வெளியேற வேண்டும். திமுக - திகவினர் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

மாமன்னர் இராஜராஜ சோழனை முட்டாள் ராஜா என்றும் வெங்காயம் என்றும் பேசிய கி.வீரமணியை வன்மையாக கண்டிக்கிறேன். ராஜராஜ சோழன் கட்டிய கோவில் எப்படி உள்ளது, இவர்கள் கட்டிய சமத்துவபுரம் எப்படி பல்லிளிக்கிறது.

ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் இருவரும் தெற்காசிய நாடுகள் முழுவதும் தங்கள் ஆளூமையின் கீழ் வைத்திருந்தார்கள். அதனால்தான் சமீபத்திய மோடி சர்க்கார் கூட ராஜேந்திர சோழனின் தபால் தலை வெளியிட்டது. அவர் பெயரை கப்பல் படைக்கு வைத்தார்கள்.

இந்த உலகத்திலேயே முதன் முதலில் கப்பல்படையை நிறுவிய மன்னன் ராஜேந்திரசோழன். அப்படிப்பட்ட மாமன்னரை குப்பை அமைப்பை சேர்ந்த கி.வீரமணி என்ற நபர் முட்டாள் ராஜா என்று சொல்லியிருக்கிறார். தன் சொத்தையெல்லாம் மனிதத்திற்கும் மதத்திற்கும் கொடுத்தவர் ராஜராஜ சோழன். நான் பகிரங்கமாகவே சொல்கிறேன். கி.வீரமணியின் சொத்துக்களை சோதனையிட வேண்டிய காலம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

தமிழிசையின் கருத்து குறித்த கேள்விக்கு, ‘’இது பெரியாழ்வார் மண் என்று தமிழிசை சரியாக சொல்லியிருக்கிறார். இது நாயன்மார்கள், ஆழ்வார்கள் அவதரித்த பூமி. தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் முட்டாள்கள், தமிழ் படித்தால் பிச்சைக்காரனாக கூட இருக்க முடியாது என்றெல்லாம் ஈவெரா பேசியிருப்பதால் தமிழ்நாடு ஈவெரா மண் அல்ல; கர்நாடகாவை வேண்டுமானால் இது ஈவெரா மண் என்று சொல்லிக்கொள்ளலாம். தமிழகத்தை இது பெரியாழ்வார் மண் என்று தமிழிசை சொன்னது மிக சரியான சாலப்பொருத்தமானது’’ என்று பதிலளித்தார்.

More News >>