#வீரம் #புலி #மெர்சல் #நேர்கொண்ட பார்வை... நெல்லை வீர தம்பதியை பாராட்டி ஹர்பஜன் போட்ட டிவீட் தல, தளபதி ரசிகர்கள் ஏக குஷி

அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையரை செருப்பு, சேர் கொண்டு அடித்து விரட்டிய , நெல்லை வீர தம்பதிகளுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதிலும் விஜய், அஜீத் ஆகியோரின் வீரம்.. புலி.. மெர்சல்.. நேர் கொண்ட பார்வை.. படப்பெயர்களுடன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்ட ஒரு டிவீட்டால் தல, தளபதி ரசிகர்கள் ஏக குஷியாகி, ஹர்பஜனை கொண்டாடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே முகமூடி கொள்ளையரை செருப்பு, சேர்களைக் கொண்டு வீரத்துடன் துரத்தியடித்த சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. வயதான காலத்திலும் கூட நெல்லை சீமைக்கே உரித்தான வீரத்துடன், இந்த வீர தம்பதியின் துணிச்சலான போராட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதனால் அந்த வீரத் தம்பதிகளுக்கு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. பிரபலங்கள் பலரும் கூட தங்கள் டிவீட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.பாலிவுட் பிரபலமான நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த வீடியோ காட்சிகளை மேற்கோள் காட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், தனக்கே உரித்தான பாணியில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில்,

திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன

#வீரம்பாசத்துக்கு முன்னாடி நான் பனிபகைக்கு முன்னாடி

#புலின்னு சொல்ர மாதிரி

#மெர்சல்காட்டிட்டாங்க.இது தமிழனின்

#நேர்கொண்டபார்வை

என்று ஹர்பஜன் சிங் உற்சாகமாக பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையிலகில் தற்போது முன்னணியில் உள்ள, அதே நேரத்தில் எதிரும் புதிருமான ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர்கள் அஜீத், விஜய் ஆகியோர் படங்களின் பெயரில் ஹர்பஜன் போட்ட டிவீட்டும் ஏக பாராட்டுகளை பெற்றுள்ளது. இதனால் தல, தளபதி ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். எப்படி பாப்ஜி , ஒரே டிவீட்ல தல, தளபதி இருவரையும் இணைச்சுட்டீங்களே, எங்களுக்கு கூட இது தோணலயே?, அடுத்த தேர்தல்ல தமிழ் நாட்டுல நில்லுங்க, நீங்க தான் நிச்சயம் சி.எம்., என்ற ரேஞ்சில் ஹர்பஜனை ஆகா, ஓகோ என புகழ்ந்துள்ளனர்.

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஹர்பஜன் விளையாடி வருகிறார். சென்னை மட்டுமின்றி தமிழகம் மீது ஹர்பஜனுக்கு ஏகப் பாசம். அதனால் கடந்த சில வருடங்களாகவே, கிரிக்கெட் மட்டுமின்றி தமிழகம் தொடர்பான விஷயங்களில் தமிழிலேயே டிவீட் செய்வது அவரது வழக்கம். இதனால் ஹர்பஜனுக்கென, சமூக வலைதளப் பக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது நெல்லை வீரத் தம்பதியை பாராட்டி பதிவிட்ட டிவீட்டால் ஹர்பஜனுக்கும் பாராட்டு மழை குவிந்துள்ளது என்றே கூறலாம்.

More News >>