அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது அறிவிப்பு நாளை சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது

இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தி வீர சாகசம் நிகழ்த்திய இந்தியப்படை விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரின் புல்வாமாவில் பாக். ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய படை வீரர்கள் 41 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியப் படை விமானங்கள், பாகிஸ்தானுக்குள் ஊடுருவிச்சென்று பாலகோட்டில் தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தன. இதனால் இரு நாடுகள் இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்களும் அத்துமீறி போக்கு காட்டின. இதில் எல்லைக்குள் உளடுருவிய பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தை, இந்திய விமானி அபிநந்தன் மிக் ரக விமானத்தில் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தினார். இதில் அபிநந்தன் சென்ற விமானமும் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து நொறுங்கியது. விமானம் கீழே விழுமுன் கீழே குதித்து உயிர் தப்பிய அபிநந்தன், பாகிஸ்தான் வசம் பிடிபட்டு பின்னர் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சாகசம் நிகழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தனுக்கு ராணுவத்தின் 3-வது உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட வாய்ப்புள்ளதாக சில நாட்களுக்கு தகவல் வெளியானது. அதே போன்று பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் இன்று மத்திய அரசு இதனை உறுதி செய்துள்ளது.

இதனால் நாளை டெல்லியில் நாளை நடைபெறும் நாட்டின் 73-வது சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது, பாலகோட் தாக்குதலை தலைமை தாங்கி நடத்திய இந்திய விமானப்படை குழு தலைவர் மின்டி அகர்வாலுக்கு யுத் சேவா பதக்கமும் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் கட்டுப்பாடுகளுடன் ஈத் திருநாள் கொண்டாட்டம்; வங்கிகள், ஏடிஎம்கள் திறப்பு

More News >>