ரஜினி மன்றத்தின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரமுகர் யார் தெரியுமா?

ரஜினி மன்றத்தின் சார்பாக மாவட்டம் தோறும் ஒருங்கிணைப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்த ராஜூ மகாலிங்கம் ரஜினி மன்றத்தின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். அப்போது பேசிய ரஜினி, “நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். தனிக்கட்சித் தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதியிலும் போட்டியிடுவேன்” என்று அறிவித்தார்.

புத்தாண்டு தினத்தன்று அடுத்தக் கட்ட அறிவிப்பை ரஜினி வெளியிட்டுள்ளார். அதாவது, “www.rajinimandram.org” என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதில் விருப்பமுள்ள உறுப்பினர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என ரஜினி அறிவித்தார்.

ரஜினிகாந்தின் தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக, தனது ரசிகர் மன்றத்தின் பெயரை மாற்றம் செயதார். அதாவது, ஏற்கனவே இருந்த அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்திற்குப் பதிலாக புதிதாக ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் சூட்டினார்.

இந்நிலையில் தனது அரசியல் பிரவேசத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது கட்சி நிர்வாகிகள் குறித்து ஆலோசணை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ரஜினி மன்றத்தின் சார்பாக மாவட்டம் தோறும் உள்ள ரசிகர்களை சந்தித்து, ஒருங்கிணைப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்த ராஜூ மகாலிங்கம் ரஜினி மன்றத்தின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி மன்றத்தில் சேர்வதற்காக மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான லைக்காவில் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜூ மகாலிங்கம் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

More News >>