73-வது சுதந்திர தின விழா கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நாட்டின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றினார்.

 

நாடு முழுவதும் இன்று 73-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி, சுதந்திர தின உரையாற்றினார். இதே போன்று அனைத்து மாநிலங்களின் தலைநகர்ங்களிலும் அம் மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்றினர். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கொடியேற்றினார்.

சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திறந்த வேனில் நின்ற படி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சுதந்திர தீன விருது வழங்கி கவுரவித்தார்.

அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது அறிவிப்பு; நாளை சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது

More News >>