ரூ.100 தராமல் செல்பி எடுப்பதா? ஆசையாக வந்தவரை ஏமாற்றிய வைகோ

நூறு ரூபாய் பணம் தராமல், தன்னுடன் சேர்ந்து செல்பி எடுக்க வந்தவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

‘மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, மதிமுக கட்சித் தொண்டர்கள் யாரும் இனிமேல் சால்வை அணிவிக்கக் கூடாது. சால்வை அணிவிப்பதற்குப் பதிலாக கட்சிக்கு நிதி வழங்கலாம். அதே போல், அவருடன் செல்பி எடுத்து கொள்ள விரும்புபவர்கள், குறைந்தது 100 ரூபாய் நிதி வழங்க வேண்டும்’ என்று அக்கட்சி சார்பில் கடந்த வாரம் அறிக்கை வெளியிடப்பட்டது.

கிருஷ்ணகிரியில்ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆம்பூர் வழியாக வைகோ காரில் சென்றார். அந்த கார் ஆம்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் வந்த போது, மதிமுக கட்சிக்காரர்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது வைகோ, காரை விட்டு கீழே இறங்கியதும் கட்சிக்காரர்கள் ஆளுக்கு நூறு ரூபாயை வைகோவிடம் கொடுத்து விட்டு செல்பி எடுத்துக் கொண்டார்கள். அதை பார்த்ததும், பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஒருவர் ஓடி வந்து வைகோவுடன் செல்வி எடுக்க முயற்சி செய்தார்.

அவரையும் நம்ம கட்சிக்காரர் என்று நினைத்து கொண்ட வைகோ, அவரிடம் கையை சுண்டி பணம் எங்கே என்று கேட்டார். பாவம், அந்த நபருக்கு மதிமுக அறிவிப்பு பற்றி தெரிந்திருக்கவில்லை. அதனால், விவரம் இல்லாமல் வந்து விட்டார். வைகோ பணம் கேட்டதும், அவர் அசடு வழிந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இந்த காட்சிகள் தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
More News >>