புதுவிதமான சுவையில் கிரீம் பண் ரெசிபி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கிரீம் பண் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பால் - 250 மிலி

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

முட்டை - 5

சர்க்கரை - ஒரு கப்

கேக் மாவு - 2 கப்

பிரட் மாவு - ஒரு கப்

ஈஸ்ட் - 2 டீஸ்பூன்

பிரெஷ் கிரீம் - கால் கப்

உப்பு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி சூடு செய்யவும். அதனுடன், வெண்ணெய் சேர்த்து கரைத்து கொதிக்க விடவும்.

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் கரு, சர்க்கரை, கேக் மாவு, பால் சேர்த்து நன்றாக கலந்து வடிகட்டிக்கொள்ளவும்.

இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கெட்டியாகும் வரை கலந்துகொண்டே இருக்கவும்.. அதனுடன் கொதிக்க வைத்த பாலும் சேர்க்கவும்.

ஒரு பாத்திரத்தில் கேக் மாவு, பிரட் மாவு ஆகியவற்றை சலித்துக்கொள்ளவும். கூடவே, சர்க்கரை, உப்பு, ஈஸ்ட் சேர்த்து கலக்கவும்.

பின்னர், ஒரு தம்பளரில் வெந்நீர், பால், பிரெஷ் கிரீம் சேர்த்து கலக்கவும். மற்றொரு கிண்ணத்தில் முட்டை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து இரண்டையும் மாவுடன் சேர்த்து மிருதுவாக ஆகும் வரை பிசைந்து சுமார் 2 மணி நேரம் விடவும்.

மாவு இரண்டு மடங்காக ஆனதும், சிறிய உருண்டைகளாக எடுத்து சிறியதாக உருட்டிக்கொள்ளவும்.

அதனுள், தயாராக வாய்த்த கெட்டியான கிரீம் நடுவில் வைத்து மூடி ஓவனில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.

மிருதுவான புதுமையான சுவையில் கிரீம் பண் ரெடி..!

More News >>