ldquoஇவர்கள் எல்லாம் தோனியின் காலில் விழ வேண்டும்!rdquo
இந்தியக் கிரிக்கெட் அணியின் சமீபத்திய நட்சத்திரங்களாகக் கருதப்படும் சஹால் மற்றும் குல்தீப் ஆகிய இருவர் தொடர்பான விவாதங்கள் சில நாள்களாகவே அதிகரித்து வருகின்றன.
இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் சஹால் மற்றும் குல்தீப் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். சமீபத்தில் கேப்டன் விராட் கோலி, 'சஹால்- குல்தீப் ஆகிய இருவரும் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையின்போது அணியின் தூண்களாக இருப்பர்' எனப் பாராட்டிக் கூறினார்.
இந்நிலையில் சஹால் மற்றும் குல்தீப் ஆகிய இருவரின் விக்கெட் வேட்டைக்கும் முக்கியக் காரணம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் அணி தேர்வாளருமான அதுல் வாசன் கூறுகையில், "இன்று சஹால் மற்றும் குல்தீப் ஆகிய இருவரும் இணைந்து தற்போதைய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானத் தொடரில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
உண்மையில் பேட்ஸ்மேன்களை இந்த சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்துவதற்கு முக்கியக் காரணமே தோனிதான். தோனி ஸ்டம்ப்புக்குப் பின் நிற்பதால்தான் இந்த வீரர்களால் விக்கெட் வீழ்த்தும் பட்டியலில் முன்னுக்கு வர முடிகிறது. இந்த இளம் வீரர்கள் தோனியின் காலில் விழுந்து கற்றுக்கொள்ள வேண்டும். இவர்களுக்காக தோனிதான் அதிகப் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்" என்று குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.