பதற்றத்தை தணிக்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் பாகிஸ்தானுக்கு டிரம்ப் அறிவுரை
இந்திய அரசு, காஷ்மீரில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் தலையிட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து விட்டார். இருநாடுகளும் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு ரத்து செய்து விட்டது. மேலும், ஜம்முகாஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக மாநிலம் பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இ
தற்கிடையே, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். அதற்கு அப்போதே இந்தியா மறுப்பு தெரிவித்து விட்டது. பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு மட்டுமே இந்தியா தயாராக இருப்பதாக உறுதியாக கூறி விட்டது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்ற பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவிடம் ஆதரவு கேட்டது. இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து, வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஹோகன் கிட்லி வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமரிடம் தொலைபேசியில் பேசினார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தால் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை பேச்சுவார்த்தை நடத்தி தணிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறினார். மேலும், அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவுகள் குறித்தும் இருவரும் பேசினர்’’ என்று கூறப்பட்டுள்ளது.
'காஷ்மீர் பிரச்னையில் பாக். உடன் மட்டுமே பேச்சுவார்த்தை' இந்தியா திட்டவட்டம்