ருசியான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் ரெசிபி

சுவையான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பெருட்கள்:

ப்ரக்கோலி - ஒரு கப்

இஞ்சி - ஒரு டீஸ்பூன்

சிக்கன் - அரை கிலோ

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

சோயா சாஸ் - 1

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் ப்ரக்கோலியை துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் போடவும்.

அத்துடன், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ், காய்ந்த மிளகாய் துகள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சுமார் 20 நிமிடங்கள் ஊறவிடவும்.

பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு முழுவதுமாக பொரித்து எடுக்கவும். சிக்கன் துண்டுகள் வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.

மீண்டும் வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

பின்னர், அதில் ப்ரக்கோலி துண்டுகள், தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து மூடிப்போட்டு வேகவிடவும்.

ப்ரக்கோலி வெந்ததும், பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மீண்டும் கிளறிவிடவும்.அத்துடன், ஒரு டீஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து சேர்த்து கிளறி வேகவிடவும்.

இறுதியாக, மிளகுத்தூள் தவி 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

சுவையான சிக்கன் ப்ரக்கோலி ரெடி..!

More News >>