ஆவின் பால் விலயை உயர்த்தியது ஏன்? முதலமைச்சர் விளக்கம்
ஆவின் பால் விலையை உயர்த்தியது ஏன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை, சேலம் மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை சேலத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விமான நிலைய வளாகத்தில், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘பால் உற்பத்திச் செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது. சட்டப்பேரவையில் அறிவித்தப்படிதான், பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
உற்பத்தியாளர்களின் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.