ஆரோக்கியமான கேழ்வரகு சப்பாத்தி ரெசிபி

சத்து நிறைந்த ராகியைக் கொண்டு சப்பாத்தி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - ஒரு கப்

தண்ணீர் - ஒரு கப்

உப்பு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் கொதிவந்ததும், கேழ்வரகு சேர்த்து நன்றாக கலந்து வேகவிடவும்.மாவு வெந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.

மாவு ஓரளவுக்கு ஆறியதும், சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

பிறகு, சிறிய உருண்டைகளாக எடுத்து உருட்டி, சப்பாத்தி போன்று விரித்துக் கொள்ளவும்.

தொடர்ந்து, தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் சப்பாத்தி மாவு போட்டு

எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் திருப்பி சுட்டு எடுக்கவும்.

சுவையான கேழ்வரகு சப்பாதி ரெடி..!

More News >>