ஆவின் லாபத்தில் உள்ள போது பால் விலையை உயர்த்தியது ஏன்? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

ஆவின் நிறுவனம் லாபத்தில்தானே இயங்குகிறது, பிறகு ஏன் பால் விலையை அரசு உயர்த்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.

சுதந்திரப் போராட்டத் தியாகி ஒண்டி வீரன் 248வது நினைவு தினத்தையொட்டி, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘ஆங்கிலேய தளபதியை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர் ஒண்டி வீரன். அவரது நினைவுதினத்தில் மரியாதை செய்துள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் அந்த மாநிலத்திற்கு திமுக துணை நிற்கும். அந்த அடிப்படையில்தான் காஷ்மீர் பிரச்னைக்காக டெல்லியில் போராட்டம் நடத்துகிறோம்.

ஆவின் பால் விலையை உயர்த்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது. பால் வளத் துறை லாபத்தில்தானே இயங்குகிறது. பிறகு பால் விலை உயர்த்த வேண்டும். கொள்முதல் விலையை உயர்த்துவதற்காக மக்களுக்கு பால் விலையை உயர்த்தினோம் என்று முதலமைச்சர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நாங்குநேரி இடைத்தேர்தல் அறிவித்த பின்பு, அதில் போட்டியிடுவது பற்றி அறிவிப்போம்’’ என்று தெரிவித்தார்.

ஆவின் பால் விலயை உயர்த்தியது ஏன்? முதலமைச்சர் விளக்கம்

More News >>