கூகுள் கோ: இப்பொழுது உலகமெங்கும்...
கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் தனது 'கோ' (Go) வரிசையில் 'கூகுள் கோ' செயலியை அறிமுகம் செய்தது. அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் தேடுபொறியின் எளிய வடிவம் இது.
அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒன்றைரை ஆண்டுகள் இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் வசிக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த கூகுள் கோ (Google Go) தேடுதல் செயலியை தற்போது உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடிய இதன் அளவு 7 எம்பி ஆகும். கூகுள் தேடுபொறி செயலியை பயன்படுத்துவது போன்றே பயனரை உணர வைக்கக்கூடிய கூகுள் கோ செயலியை, ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மற்றும் அதற்கு பின்னான இயங்குதள வடிவங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
கூகுள் கோ செயலியில் 'லென்ஸ்' என்று ஓர் அம்சம் உள்ளது. பயனர்கள் சொற்றொடர்களை மொழிபெயர்ப்பு செய்ய இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். இணைய பக்கத்தை சத்தமாக வாசிப்பதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது. செயலிகளின் இணைய வடிவத்தை எளிதாக சென்றடைவதற்கும் கூகுள் கோ உதவுகிறது. இதை பயன்படுத்தி தேடிக்கொண்டிருக்கும்போது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால், பயன்படுத்தும்போது பயனர் இருந்த இடத்தை நினைவில் வைத்து, மீண்டும் இணைப்பு கிடைத்ததும் பயனர் தேடியவற்றிற்கு பதில் தரும் வசதியை கூகுள் கோ கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போனை கண்காணிப்பு காமிராவாக பயன்படுத்துவது எப்படி?