அன்று விருந்தாளி, இன்று ஊழல் கைதி அதே சி.பி.ஐ. அலுவலகம்
மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, அவரது தலைமையில் திறப்பு விழா கண்ட சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேற்று அவர் கைதியாக தங்கியிருக்கிறார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நேற்றிரவு டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள், லோதி சாலையில் உள்ள சி,பி.ஐ. தலைமை அலுவலகத்திற்கு கொண்டு சென்று தரைத்தளத்தில் உள்ள கெஸ்ட் அறையில் (5வது சூட்) தங்க வைக்கப்பட்டார்.
இந்த சி.பி.ஐ. தலைமை அலுவலகம் கடந்த 2011ம் ஆண்டில் கட்டப்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் தான் இருந்தார். அதனால், சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திற்கு இந்த 11 மாடிக் கட்டடம் கட்டி முடித்து திறப்பு விழா நடைபெற்ற போது, சிதம்பரம் முக்கிய விருந்தாளியாக கலந்து கொண்டார். கடந்த 2011 ஜூனில், அவரது தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது. முக்கிய விருந்தாளியாக இருந்த சிதம்பரம், இப்படி ஒரு நாள் ஊழல் வழக்கு கைதியாக இதே அலுவலகத்திற்கு வர வேண்டியிருக்கும், ஒரு இரவு முழுக்க தங்க வேண்டியிருக்கும் என்றெல்லாம் சிந்தித்து பார்த்திருக்கவே மாட்டார். ஆனால், காலம் இன்று அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது பாவம்தான்.
சிபிஐயின் செயல்பாடு, நாட்டிற்கே அவமானம்; ஸ்டாலின் கண்டனம்