உடல்நலம் காக்கும் இயற்கை வாழ்வியல்
இருபதாம் நூற்றாண்டுக்கு பிறகு மனித இனம் தன் நாகரீக மாற்றத்தால் அடைந்த முன்னேற்றங்கள் ஏராளம். பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையிலிருந்து விலகி பணப்புழக்கத்திற்கு மாறிய பிறகு, மனிதன் தனக்கு கிடைத்த எல்லா முன்னேற்ற கண்டுபிடிப்புகளையும் தன் சுயலாபத்திற்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் பயன்படுத்த தொடங்கினான்.
ஆங்கிலேயன் பல நாடுகளை அடிமைப்படுத்திய காலத்தில், அந்த நாட்டு கலாச்சாரத்தையும், அதன் பன்பாட்டையும் சீர்குலைத்து, தன் நாட்டு உற்பத்தியையும் கண்டுபிடிப்புகளையும் அவர்களின் மேல் திணித்தான்.
அப்படி ஆங்கிலேயர்களிடம் சிக்கி, தன் பரிசுத்தத்தை இழந்த நாடுகளில் ஒன்றுதான் நமது இந்தியா. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வியாபார நோக்கத்திற்காக இந்தியாவிற்கு வந்தபோது, நம் நாட்டை பார்த்து அவர்கள் பிரம்மித்துப்போன இரண்டு விஷயங்களில் ஒன்று, இந்தியர்கள் தங்கள் மதங்கள், கடவுள்கள் மீது வைத்திருக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கை, மற்றொன்று இயற்கை விவசாயம். அதாவது மாட்டு சாணத்தில் மட்டுமே செய்து வந்த விவசாயம்.
இந்தியாவை அடிமைப்படுத்த அவர்களின் பாரம்பரிய விவசாய முறைகளை அழிக்க வேண்டுமே, அப்போதுதானே கடைசியில் விதை நெல்லுக்கு கூட அவர்கள் நம்மிடம் கையேந்த முடியும்.
ஆகவே, தனது இல்லுமினாட்டி மூளையை பயன்படுத்தி, கலப்பின ஜெர்சி பசுக்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும், உரங்களையும் இறக்குமதி செய்தார்கள். இன்று பாதி வெற்றியும் கண்டுள்ளார்கள்; நினைத்ததை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பாவிகள்நமது சாப்பாட்டில் நஞ்சை கலந்துவிட்டார்கள்.
இது ஒரு உதாரணம் மட்டுமே! ஒருவகையான பூச்சிமருந்து தெளிப்பதால், அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பல ஆண்டுகளாக உடல் உறுப்புகள் ஊனமான நிலையிலேயே குழந்தைகள் பிறக்கிறது.
இதுபோல் எதிர்வினைகள் நம்மை தாக்கிவிடாத படிக்கும், வருங்கால சந்ததியை நலமான முறையில் நாம் உருவாக்கிடவும் இன்றே நம் உடல் மீதி அக்கறை காட்ட தொடங்குவோம்.முதலில் மனித உடல் பற்றி ஆய்வு செய்வோம். பிறகு உடலுக்கேற்ற உணவை தீர்மாணிப்போம்.
மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்த பஞ்ச பூதங்களில் நான்கு பூதங்களான நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன நான்கும் மனிதனிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உணவாகப் பயன்படுகிறது. ஆனால் ஐந்தாவது பூதமாகிய நிலம் நேரடியாக மனித உடலுக்கு உணவாகப் பயன்படாது. மண்ணிற்கும் ஜீவராசிகளுக்குமிடையில் தாவரங்கள் உள்ளன.
அறிவியலாளர்கள் நமக்கு பட்டியலிட்டுக் கொடுத்துள்ள தாது உப்புக்களும், மற்ற உணவின் பகுதிப் பொருள்களும், ஜீவ சத்துக்களான வைட்டமின்களும், தாவரங்களின் வாயிலாக வந்தாலேயன்றி அதை மனித உடல் தன்னுடைய பொருளாக மாற்றிக் கொள்ளும் சக்தியை பெற்றிருக்கவில்லை.
அவ்வாறான உணவுப் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அது உடலில் அந்நிய பொருளாக மட்டுமே தங்கி, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது.
மனித உடலில் அந்நியப் பொருட்கள் எப்படி சேர்கிறது என்று பார்ப்போம்:-
தாவரங்களில் மூலம் கிடைக்காத ஒரே ஒரு உணவுப் பொருள் சோடியம் குளோரைடு எனப்படும் உப்பு. அது நமது உடலின் வேதியியல் தன்மையை அமிலத்தன்மையாக மாற்றுகிறது.
ஹோட்டல்களில் சமைக்கப்படுகின்ற, டப்பாக்களிலும், பாட்டில்களிலும் அடைத்து விற்பனைக்கு வருகின்ற அனைத்துப் பொருட்களிலும், பாதுகாப்புக்காக சேர்க்கப்படும் இராசாயனப் பொருட்கள் அனைத்தும் செரிமானமாகி வெளியேற்றப்படாமல் நம் உடலிலேயே தங்குகின்றன.
மருத்துவம் என்ற பெயரில் அதிகமாக நாம் பயன்படுத்தப்படுகின்ற மருந்துகள், மனித இரத்தத்தின் இராசாயனத் தன்மையாகிய காரத்தன்மையை, அமிலத்தன்மை மிகுந்ததாக மாற்றுகிறது.
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக்கொல்லிகள் ஆகியவை விளைபொருட்களிலும் கலக்கின்றன. அதை உண்பதால், அதில் உள்ள இராசாயனங்கள் மனித உடலில் தங்கி விடுகின்றன.
மனித உடலின் அடிப்படை செல்களாகிய குருதி, காரத்தன்மையுடையது. ஆனால் நமது அன்றாட உணவுப் பழக்கமானது, அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.
இத்தகைய செயல்களினால், மனிதன் தன் உடலில் மண்ணின் தன்மை அதிகரிக்கும்படி செய்து கொள்கின்றான்.
முதலில் அதன் விளைவாகத் தோன்றுவது சாதாரண சளி என்ற தொல்லை. அதனைப் புரிந்து கொள்ளாமல், அதனோடு போராட்டம் நடத்துகின்ற மருத்துவ முறைகள், உடலில் மென்மேலும் மண்ணின் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.
பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணில் புற்று வளர்வதைப் போல, இறுதியில் மனித உடலிலும் புற்று உண்டாகிறது. புற்றுநோயாக உருவாகிறது.!
இவற்றிலிருந்து மனித இனத்தை காப்பாற்ற இயற்கைக் வாழ்வியலை நாம் கடைபிடிப்பது அவசியமாகிறது. இயற்கை வாழ்வியல், மிக எளிய முறையில் எவ்வித பின் விளைவுகளும் இல்லாமல் உடல் நலத்தை உயர்த்த வழி செய்கிறது.
இயற்கை வாழ்வியல் விதிகளை இங்கு காண்போம்:-
இயற்கை வாழ்வியல் என்பது சமையலில் மறுமலர்ச்சி (Positive Cooking) அடைவதாகும்,
நாம் உண்ணுக் உணவில், உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சோடியம் குளோரைடு எனப்படும் உப்பின் உபயோகத்தைக் குறைக்கவும், சில சமயங்களில் உப்பே இல்லாமல் உணவை சுவை மிக்கதாக மாற்றவும், வழிமுறைகள் இருக்கின்றன.
இரசாயனப் பொருட்கள் கலந்த எந்த ஒரு உணவுப் பொருளையும் உட்கொள்ளாது தவிர்க்க வேண்டும். உணவல்லாத பொருட்களை மருந்தாகப் பயன்படுத்தாமலிக்க வேண்டும். இரத்தத்தின் இரசாயனத் தன்மைக்கேற்ப உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
கேரட், முட்டைக்கோஸ், பூசணி, சௌசௌ, முள்ளங்கி, நெல்லிக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடுப்பில் ஏற்றாமலேயே சாப்பிட வேண்டும். இதனால் வைட்டமின்கள் என்று சொல்லப்படுகின்ற ஜீவசத்துக்களும், தாது உப்புக்களும் உடலுக்கு முழுமையாகக் கிடைக்கின்றது. எனவே குறை நோய்கள் (Deficiency Diseases) தோன்றுவதில்லை.
அதுபோல, சூரிய ஒளியின் திரவ வடிவங்களான அருகம்புல் சாறு, வல்லாரைச்சாறு, மனத்தக்காளிச்சாறு, துளசிச்சாறு, வில்வச்சாறு, வாழைத்தண்டுச்சாறு, நெல்லிக்கனிச்சாறு, ஆகியவற்றை சரியான முறையில் உணவுப் பொருளாகப் பயன்படுத்த வேண்டும்.
இவை மிகச் சிறந்த மருந்துப் பொருள்களாக அமைந்து, உயிராற்றலை தங்கு தடையின்றி உயிரோட்டமாக இயங்க வைக்கிறது.
ஆகவே விஞ்ஞான வளர்ச்சியால் தளர்ந்துவரும் நம் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, இயற்கை வாழ்வியலோடு இணைந்து பயன்பெறுவோம். நலம் பெறுவோம்.