தமிழகத்தில் ஊடுருவிய லஷ்கர் தீவிரவாதிகள் கோவையில் பதுங்கல்? சந்தேகப்படும் நபரின் புகைப்படம் வெளியீடு

தமிழகத்தில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் கோவையில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் புகைப்படமும் வெளியிடப்பட்டதால், கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை பலப்படுத்தப்பட்டு கோவை முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்துக்குள் லஷ்கர் இயக்க பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாக தமிழக போலீசாருக்கு, மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை வழியாக இந்த பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், குண்டு வெடிப்பு போன்ற நாச வேலைகளில் ஈடுபடலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, ரயில், விமான நிலையங்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே பயங்கரவாதிகள் கோவையில் தாக்குதல் நடத்த குறிவைத்துள்ளதாகவும், அங்கு பதுங்கியுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதில் கோவையில் பதுங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதி ஒருவனின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் புகைப்படத்தில் உள்ள நபர் குறித்த தகவல் தெரிந்தால் போலீசாரை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகி கோவையில் உச்சபட்ச கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது'

இதற்கிடையே கோவையில் பதுங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதியின் புகைப்படம் வெளியான தகவலை தமிழக டிஜிபி திரிபாதி மறுத்துள்ளார்.

தீவிரவாதிகள் ஊடுருவலா? பயப்படத் தேவையில்லை; கோவை கமிஷனர் பேட்டி

More News >>