தமிழகக் கிராமங்களுக்காகவே இந்த அமெரிக்கப் பயணம்: விளக்கும் கமல்!

"தமிழகக் கிராமங்களின் மேம்பாடுக்காகவே இந்த அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டேன்" என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

விரைவில் தமிழக அரசியலில் கால்பதிக்க உள்ள கமல்ஹாசன் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அங்கு கமல், 'இனி சினிமா துறையில் இருந்து தான் விருப்ப ஓய்வு பெறுவதாகவும் இனிமேல் நடிக்கப்போவதில்லை' என்றும் அறிவித்தார்.

மேலும், அடுத்த புதன்கிழமை தனது கட்சி தொடக்கவிழாவை நடத்தி கட்சியின் பெயர், சின்னம் உள்ளிடவைகளை அறிமுகப்படுத்த உள்ளார் கமல். மேலும் தனது அமெரிக்கப் பயணம் குறித்து கூறுகையில், "நமது தமிழகக் கிராமங்களுக்காவே இந்த அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டேன்.

அமெரிக்காவில் வாழும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட பல தொழிலதிபர்கள் தமிழக கிராமங்களின் மேம்பாடுக்காக முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

நமது பலம் விவசாயம்தான். அந்த விவசாயத்தை மட்டுமே தொழிலாகச் செய்து வரும் கிராமங்களின் வளர்ச்சியில்தான் நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

More News >>