சர்தார் படேல் கனவை நிறைவேற்றியுள்ளோம் அமித்ஷா பேச்சு
காஷ்மீர் விஷயத்தில், சர்தார் வல்லபபாய் படேல் கனவை நிறைவேற்றியுள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர், லடாக் என்று அம்மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இதனால், கடந்த 5ம் தேதி முதல் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி கைது உள்பட முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் போலீஸ் அகடமியில், ஐ.பி.எஸ். பயிற்சி முடித்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று(ஆக.24) நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு, இளம் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், அவர் பேசுகையில், ‘‘இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல் காஷ்மீரையும் இணைத்ததன் மூலம் நாங்கள் சர்தார் வல்லபபாய் படேலின் கனவை நிறைவேற்றியுள்ளோம். நாட்டிற்கு சேவையாற்ற இந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்த அவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்து ெகாள்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.
காஷ்மீரில் எதிர்ப்பு போஸ்டர்; மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்