செப்.15ல் முப்பெரும் விழா திமுக விருதுகள் யாருக்கு?
அடுத்த மாதம் 15ம் தேதி தி.மு.க. நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் தேதியன்று தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படும். இந்த விழாவில், பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியன்று திருவண்ணாமலையில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.
இந்த முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்களை அக்கட்சியின் தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:பெரியார் விருது - த.வேணுகோபால், அண்ணா விருது - சி.நந்தகோபால், கலைஞர் விருது - ஏ.கே.ஜெகதீசன், பாவேந்தர் விருது - சித்திரமுகி சத்தியவாணி முத்து, போராசிரியர் விருது - தஞ்சை இறைவன் ஆகியோருக்கும் வழங்கப்படும்.
செப். 15-ம் தேதி திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிபிஐயின் செயல்பாடு, நாட்டிற்கே அவமானம்; ஸ்டாலின் கண்டனம்