இந்த வாட்டியாவது கன்ஃபார்மா ரிலீஸ் ஆகிடுமா தனுஷ் சார்!
எனை நோக்கி பாயும் தோட்டா கிட்டத்தட்ட படம் ரெடி ஆகி ரிலீசுக்கே இரண்டு ஆண்டுகள் காத்துக் கிடக்கும் தனுஷ் – கெளதம் மேனன் படம்.
விண்ணைத்தாண்டி வருவாயா, வாராணம் ஆயிரம் என பல வெற்றி படங்களை கொடுத்த கெளதம் மேனனுக்கு முதல் சறுக்கலாக இந்த படத்தின் ரிலீஸ் பிரச்னை மாறியது.மேகா ஆகாஷ் இந்த படத்தில் அறிமுக நாயகியாக ஆவார், என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங் ஆகிய மூன்று படங்களில் நடித்து, அடுத்த பட வாய்ப்புகள் இல்லாமல் ஃபீல்ட் அவுட் ஆகியுள்ளார்.இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் டிரைலர் ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது.
படம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் என எதிர்பார்க்க வைக்கிறது. வரும் செப்டம்பர் 6ம் தேதி நிச்சயமாக வருவதாக அறிவித்துள்ளனர். இந்த முறை எந்த தடையுமின்றி படம் வெளியாக வாழ்த்துகள்!