மோடியின் இங்கிலீஸ் நல்லாத்தான் இருக்கு... ஆனா பேசத்தான் மாட்டேங்கிறார்... டிரம்ப் ஜோக்
இந்தியப் பிரதமர் மோடி இங்கிலீசில் பேசுவது நல்லாவே இருக்கு.. ஆனா பேசத்தான் மாட்டேங்கிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜோக்கடித்துள்ளார்.
பிரான்சில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் இடையே டிரம்ப்பும் மோடியும் இன்று தனியாக சந்தித்துப் பேசினர். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு உறவுகள், வர்த்தகம், தொழில் முதலீடு மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான விவகாரம் பற்றியெல்லாம் பேசியுள்ளனர்.
இதன் பிறகு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, பிரதமர் மோடி இந்தியிலேயே பதிலளித்தார். அப்போது இடையில் குறுக்கிட்ட டிரம்ப், மோடி இங்கிலீஸ் பேசுவது நன்றாகவே உள்ளது. ஆனால் அவர் ஏனோ இங்கிலீசில் பேசுவதை தவிர்க்கிறார் என்று அவருடைய கையை குலுக்கியபடியே டிரம்ப் ஜோக் அடிக்க , செய்தியாளர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.