அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளோடு அசத்தும் வார் டிரைலர்!
யாஷ் ராஜ் சோப்ரா ஃபிலிம்ஸ் என்றாலே தூம் போல பட்டாசு கிளப்பும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாகவே இருக்கும்.
இம்முறை ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நேரடியாக ஒருவருக்கொருவர் மோதும் அசத்தல் சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் மெகா த்ரில்லராக வார் திரைப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள வார் டிரைலர் இந்திய அளவில் யூடியூபில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது.
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள வார் திரைப்படத்தில் நாயகியாக வாணி கபூர் நடித்துள்ளார். ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் சீக்ரெட் ஏஜெண்டுகளா அல்லது தீவிரவாதிகளா என்பது தெரியாத வண்ணம் டிரைலர் சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்டுகளை கொண்டு அடுக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் படங்களுக்கு இணையான சண்டை காட்சிகள் மற்றும் ஹைடெக் பாம்ப் எக்ஸ்ப்ளோஷன் காட்சிகள் இந்த படத்தில் அதிகமாக பயன்படுத்த பட்டுள்ளது.
ஹிரித்திக் ரோஷன் ரசிகர்கள் மற்றும் டைகர் ஷெராஃப் ரசிகர்களுக்கு விருந்தாக மட்டும் அல்லாமல், பாலிவுட்டில் ஆக்ஷன் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களின் விருப்பப் படமாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி பண்டிகையன்று வார் திரைப்படம் வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காப்பான் படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சட்ட சிக்கல்